Published:Updated:

இந்தியா-சீனா நல்லுறவு மூலம் தீபெத் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்: தலாய்லாமா

Vikatan Correspondent

திபெத்: இந்தியா-சீனா இடையேயான நல்லுறவின் மூலம் திபெத் பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என ஆன்மிக தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று (17ஆம் தேதி) இந்தியா வந்தார். ஆமதாபாத் வந்த அவரை பிரதமர் நரேந்திர வரவேற்றார். அதைத் தொடர்ந்து 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் டெல்லியில் இன்று (18ஆம் தேதி) நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகள் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமா கூறுகையில், ''இந்தியா-சீனா இடையேயான நல்லுறவு வரவேற்கத்தக்கது. இதனால் ஆசிய கண்டத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இந்தியா-சீனா இடையே ஒரு பரஸ்பர நல்லுறவை உருவாக்க முடியும்.

அதேபோல், திபெத் பிரச்னை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் உள்ள பிரச்னை. இந்த பிரச்னையை புரிந்துணர்வு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம். விரைவில் இதுகுறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசி ஒரு சுமுக தீர்வு காணவேண்டும்'' என்றார்.