Published:Updated:

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக ரிச்சர்ட் வர்மா நியமனம்!

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக ரிச்சர்ட் வர்மா நியமனம்!
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக ரிச்சர்ட் வர்மா நியமனம்!
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக ரிச்சர்ட் வர்மா நியமனம்!

வாஷிங்டன்: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக அமெரிக்க வாழ் இந்தியரான ரிச்சர்ட் ராகுல் வர்மா என்பவர் நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்ட ஒபாமா, நமது நாட்டின் முக்கியமான இந்த நேரத்தில், அமெரிக்க மக்களுக்காக தங்கள் திறமைகளை அர்பணிக்க இந்த சிறந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் வர்மா, மாநில சட்ட விவகாரங்கள் துறையில் துணைச் செயலாளாராக பணியற்றியவர். தற்போது, அவர் தனியார் துறையில் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்க செனட் சபை ஒபாமாவின் நியமனத்தை உறுதி  செய்தால், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதராக பணியாற்றும் முதல் இந்திய அமெரிக்கர் இவர் ஆவார்.

பிரதமர் நரேந்திரமோடி இந்த மாத இறுதியில் அமெரிக்க செல்லவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.