Published:Updated:

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் பிரிட்டன் பத்திரிகையாளர்: வீடியோ வெளியீடு!

வாஷிங்டன்: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் பிரிட்டன் பத்திரிகையாளர் ஒருவர் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையடுத்து, அந்நாட்டு பத்திரிகையளர் ஜேம்ஸ் போலோ என்பவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்.

அதைத் தொடரந்து ஸ்டீவன் ஸ்டோலப் என்ற பத்திரிகையாளரையும் அதேபாணியில் அவர்கள் கொலை செய்தனர். இதற்கிடையே பிரிட்டனை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரையும் தலையை துண்டித்தனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்.

இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த ஜான் கேன்டில் என்ற பத்திரிகையாளரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருப்பதாக வீடியோ ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். மேலும், விரைவில் மேற்கத்திய ஊடகங்கள் தங்களை எப்படி சித்தரிக்கிறது என்ற உண்மையை விரைவில் வெளியிடுவோம் என்று அதில் கூறியுள்ளனர்.