Published:Updated:

இலங்கைக்கு எதிராக சாட்சியங்கள்: தமிழகத்துக்கு சிவாஜிலிங்கம் கோரிக்கை!

யாழ்ப்பாணம்: இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்த சாட்சியங்களை ஐ.நா.வுக்கு தமிழகம், புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகளுக்கு அனுப்ப வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கையில் இருந்து சாட்சியங்களை திரட்டி அனுப்ப பல்வேறு இடர்பாடுகள் உள்ளதாக புகார் கூறினார்.

அச்சுறுத்தல் இருப்பதால் சாட்சியமளிக்கும் தன்மை மந்தமாக இருக்கிறது என்று தெரிவித்த சிவாஜிலிங்கம், ஐ.நா மனித உரிமைகள் ஆணைய விசாரணை குழுவுக்கு சாட்சியங்களை தமிழ்நாடு, புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அமைப்புகளும் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.