Published:Updated:

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்!
யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்!

கொழும்பு: இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல இடங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி டாக்டரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ராஜனி திராணகம சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது 25வது நினைவு தினம் நாளையும் (20ஆம் தேதி), நாளை மறுதினமும் அனுசரிக்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்!

இந்நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ''கொடிய எல்.டி.டி.ஈ. பயங்கரவாதிகளினால் 1989 செப்டெம்பர் 21ஆம் திகதி அன்று சுட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகளை ராணுவத்தினர் ஒட்டியிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகமடைந்துள்ளனர்.