Published:Updated:

ஸ்காட்லாந்து முடிவு இலங்கைக்கு ஒரு பாடம்: சம்பந்தன்

Vikatan Correspondent
ஸ்காட்லாந்து முடிவு இலங்கைக்கு ஒரு பாடம்: சம்பந்தன்
ஸ்காட்லாந்து முடிவு இலங்கைக்கு ஒரு பாடம்: சம்பந்தன்
ஸ்காட்லாந்து முடிவு இலங்கைக்கு ஒரு பாடம்: சம்பந்தன்

யாழ்ப்பாணம்: அதிகாரங்கள் பகிரப்பட்டால் பிரிவினையை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்காட்லாந்து முடிவு இலங்கைக்கு ஒரு பாடம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்காட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பே ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை.

அதேவேளை, ஸ்காட்லாந்து மக்கள் எடுத்த முடிவு எதுவாக இருந்த போதிலும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் முக்கிய கட்சிகள் அனைத்து தலைவர்களும், ஸ்காட்லாந்துக்கு இன்னமும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆகவே ஒரு தனியான வாழ்விடத்தில் உள்ள, தனியான இன மக்களுக்கு உரிய அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவதன் மூலம் பிரிவினையை தடுத்துக் கொள்ள முடியும் என்பது இலங்கைக்கு உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு பாடம்.

குறிப்பாக தற்போது ஸ்காட்லாந்து மக்கள் மீதான பொதுவாக்கெடுப்பில் அந்த மக்கள் எடுத்துள்ள முடிவு அதாவது தாங்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தோடு தொடர்ந்து  இணைந்திருப்பதையே விரும்புவதாகவும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட மேலும் கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், இதுவே  அவர்களின் வாக்கெடுப்பு முடிவு என உணர்த்தியுள்ளது.

அத்துடன் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான அரசியல்கட்சிகள் இதனையே வலியுறுத்தியுள்ளன. ஸகாட்லாந்து மக்களுக்கான கூடுதலான அதிகாரங்கள் வழங்குவதன் ஊடாக பிரிவினை கோஷத்தை நிறுத்த முடியும்  எனவும் அவர்கள் தெளிவாக கூறியிருக்கின்றனர். இது இலங்கை உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களுக்கு சிறந்த ஒரு பாடமாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.