Published:Updated:

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பெரும் அனுபவம் பெற்றுள்ளோம்: ராஜபக்சே

Vikatan Correspondent
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பெரும் அனுபவம் பெற்றுள்ளோம்: ராஜபக்சே
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பெரும் அனுபவம் பெற்றுள்ளோம்: ராஜபக்சே
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பெரும் அனுபவம் பெற்றுள்ளோம்: ராஜபக்சே

கொழும்பு: பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம், அதில் பெரும் அனுபவம் பெற்றுள்ளோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

ஆசிய அரசியல் மாநாடு இலங்கையில் உள்ள கொழும்புவில் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாடு நாளை (21ஆம் தேதி) வரை நடக்கிறது.

இந்நிலையில், இன்று (20ஆம் தேதி) நடந்த மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''பெரும் கேடுகளை விளைவிக்கும் அளவில் பயங்கரவாதம் ஆசியாவில் வளர்ந்து வருகிறது. இந்த பயங்கரவாதிகள் அனைவரும், அப்பாவி மக்களை கொன்று குவிப்பதையே இலக்காக கொண்டுள்ளனர்.

இதுபோன்ற பயங்கரவாதிகளை ஒழித்ததன் மூலம் எங்களுக்கு பெரும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசியாவின் இறையாண்மையை காத்திட, எங்களின் அனுபவங்களை பகிரவும், எந்தவொரு உதவியை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆசியாவை வளம் பெற நாம் அனைவரும் ஒருசேர்ந்து பணியாற்றுவது அவசியமாகும். நமது ஒற்றுமையை வலிறுத்தவே இந்த முறை இம்மாநாட்டை கொழும்புவில் நடத்துகிறோம்.  இன்று கூடியிருக்கும் மாநாடு அர்த்தமுள்ளதாக அமையட்டும்.

இலங்கையில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்த பிறகு, இலங்கை பொருளாதார வளர்ச்சி பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இருப்பினும்  தற்போதும், இலங்கையில் பயங்கரவாத சக்திகள், அரசியல் கட்சிகள் ஆதரவுடன் காலூன்ற நினைக்கின்றன. ஆனால் இதுபோன்ற தருணத்தில் அரசியில் கட்சியினர் வேறுபாடுகளை களைந்து ஒரணியில் நின்று போராட முன்வர வேண்டும்'' என்றார்.