Published:Updated:

பாகிஸ்தானுக்கு 160 ராணுவ வாகனங்கள்: அமெரிக்கா விற்பனை!

Vikatan Correspondent
பாகிஸ்தானுக்கு 160 ராணுவ வாகனங்கள்: அமெரிக்கா விற்பனை!
பாகிஸ்தானுக்கு 160 ராணுவ வாகனங்கள்: அமெரிக்கா விற்பனை!
பாகிஸ்தானுக்கு 160 ராணுவ வாகனங்கள்: அமெரிக்கா விற்பனை!

வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்காக 160 அதிநவீன ராணுவ வாகனங்களை பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா விற்பனை செய்கிறது.

பாகிஸ்தானின்  வட வஜ்ரிஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் முகாமிட்டு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் திறனை அதிகரிப்பதற்காக, கண்ணி வெடி தாக்குதல் அபாயத்திலிருந்து காக்கும் ஆற்றல் கொண்ட ராணுவ வாகனங்கள் உள்பட 160 வாகனங்களை அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு விற்பனை செய்கிறது.

இதற்கான ஒப்பந்தங்கள் சமீபத்தில் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 198 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். (ரூ.1188 கோடி). மேலும், உதிரிபாகங்கள், பழுது பாகங்கள், சோதனை உபகரணங்கள்  மற்றும் அதிகாரிகள் பயிற்சிகள் உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உபயோகத்தில் இருந்து வருகிறது என்பதும், பாகிஸ்தானும், தலிபான் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இந்த வாகனங்களை பயன்படுத்தி பரிசோதித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.