Published:Updated:

ராஜபக்சேவுடன், பா.ஜ.க. அரசியல் குழு சந்திப்பு!

Vikatan Correspondent
ராஜபக்சேவுடன், பா.ஜ.க. அரசியல் குழு சந்திப்பு!
ராஜபக்சேவுடன், பா.ஜ.க. அரசியல் குழு சந்திப்பு!
ராஜபக்சேவுடன், பா.ஜ.க. அரசியல் குழு சந்திப்பு!

கொழும்பு: இலங்கையில் நடக்கும் ஆசிய அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பா.ஜ.க. குழு அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினர்.

இலங்கையிலுள்ள கொழும்புவில் ஆசிய அரசியல் மாநாடு கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. சார்பில் முரளிதர் ராவ் மற்றும் விஜய் கோலி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று (20ஆம் தேதி) இவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மீனவர்களை விடுதலை செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், இலங்கை வாழ் தமிழர்கள் நலனுக்காக, தமிழ் தேசிய அமைப்புடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.