Published:Updated:

இலங்கை மாகாண கவுன்சில் தேர்தல்: ராஜபக்சே கட்சிக்கு பின்னடைவு!

Vikatan Correspondent
இலங்கை மாகாண கவுன்சில் தேர்தல்: ராஜபக்சே கட்சிக்கு பின்னடைவு!
இலங்கை மாகாண கவுன்சில் தேர்தல்: ராஜபக்சே கட்சிக்கு பின்னடைவு!
இலங்கை மாகாண கவுன்சில் தேர்தல்: ராஜபக்சே கட்சிக்கு பின்னடைவு!

கொழும்பு: இலங்கையில் நடந்த தென் கிழக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் ராஜபக்சே கட்சி கடந்த தேர்தலைவிட குறிந்த வாக்குகளே பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் தென் கிழக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நேற்று (20ஆம் தேதி) நடந்தது. 34 இடங்களுக்கு நடந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (21ஆம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இக்கட்சி 19 இடங்களிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 13 இடங்களிலும், ஜே.வி.பி. கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபக்சேவின் ஆளும் கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 6 இடங்கள் குறைந்து 19 இடங்களே பிடித்துள்ளது. இதன் மூலம் மிகவும் கஷ்டப்பட்டு மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை விட, இருமடங்கு வெற்றி இந்த தேர்தலில் கிடைத்துள்ளது.

தென் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ராஜபக்சேவின் சகோதரர் மகன் பதவி வகித்து வருகிறார். எனவே அவருக்காக அதிபர் ராஜபக்சேவே நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அவரது கட்சிக்கு 22.98 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. மேலும், பதுலா மாவட்டத்திலும் 67 சதவீத வாக்கில் இருந்து 47 சதவீதமாக குறைந்து விட்டது.

இந்த தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி குறைந்த இடத்தில் வெற்றி பெற்றிருப்பது அவரது செல்வாக்கின் சரிவை காட்டுவதாக உள்ளது.