Published:Updated:

அண்ணாவுக்கு யு.எஸ்.சில் இந்திய மாணவர்கள் ஆதரவு

வாஷிங்டன், ஆக.17,2011

ஊழலுக்கு எதிரான அண்ணா ஹஜாரே குழுவின் போராட்டத்துக்கு, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ##~~##

அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் 35 பேர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று இந்திய ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அளித்தனர்.

அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததன் மூலம் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் உள்ள வேறு சில இந்திய தூதரகங்களிலும் இது போன்ற மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு