Published:Updated:

இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும்: தீவிரவாத அமைப்பு வலியுறுத்தல்!

விகடன் விமர்சனக்குழு
இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும்: தீவிரவாத அமைப்பு வலியுறுத்தல்!
இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும்: தீவிரவாத அமைப்பு வலியுறுத்தல்!
இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும்: தீவிரவாத அமைப்பு வலியுறுத்தல்!

கராச்சி: இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஜமாத் உத்-தவா வலியுறுத்தியுள்ளது.

கராச்சி நகரில் பத்திரிகையாளர் மன்றம் அருகே ஜமாத் உத்-தவா தீவிரவாத இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது, அந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் கலந்து கொண்டு பேசும்போது, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் துப்பாக்கி சண்டைக்கு கண்டனம் தெரிவித்தான். இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாகிஸ்தானை சேர்ந்த அப்பாவி மக்கள் பலியாவதாக குற்றம்சாட்டினான்.

மேலும், பேரணியில் கலந்து கொண்டவர்கள் 'இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்' என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சர்வதேச எல்லை விதியை இந்தியா மீறி வருவதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள் இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு துணை நிற்போம்.

அமெரிக்கா துணையுடன் இந்தியா, சர்வதேச எல்லையில் தாக்குதல் நடத்திவருகிறது. இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டும். இந்தியாவின் அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். நாட்டின் பாதுகாப்புக்காக அணுகுண்டு தயாரிக்கப்பட்டது" என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

ஜமாத்-உத்-தவா அமைப்பின் கராச்சி தலைவர் முசம்மில் இக்பால் ஹஷ்மி பேசுகையில், ''இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான கொள்கையின் ஒரு பகுதியாகவே சியால்கோட் எல்லைப் பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு பிரச்னையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள மோடி விரும்புகிறார். நாட்டை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய ஒவ்வொரு குடிமகனும் தயாராக உள்ளனர். இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள, நாட்டு மக்கள் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைக்கு பின்னால் நிற்கின்றனர்" என்றார்.