Published:Updated:

மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க தலிபான் தீவிரவாத இயக்கம் எதிர்ப்பு!

மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க தலிபான் தீவிரவாத இயக்கம் எதிர்ப்பு!
மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க தலிபான் தீவிரவாத இயக்கம் எதிர்ப்பு!
மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க தலிபான் தீவிரவாத இயக்கம் எதிர்ப்பு!

கராச்சி: பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு, தலிபான் தீவிரவாத இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது.

17 வயதாகும் பாகிஸ்தான் சிறுமி மலாலா, தனது 11வது வயது முதல் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு மின்கோரா நகரில் அவர் வசித்தபோது தலீபான் தீவிரவாதிகள் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்கிறார்கள் என்று பி.பி.சி. வானொலியின் உருது சேவை நிகழ்ச்சிக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு சிறுமி தனது நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் ஆத்திரமடைந்த தலீபான் தீவிரவாதிகள் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளிக் கூடத்துக்கு மலாலா பஸ்சில் சென்றபோது அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர் இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்த மலாலா தற்போது இங்கிலாந்தில் இருந்தவாறே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு, தலிபான் பயங்கரவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மலாலாவை விமர்சித்துள்ள தலிபான் தீவிரவாத இயக்கம் "நம்பிக்கை இல்லாதவர்களின் ஒரு முகவர்" என்று தெரிவித்துள்ளது.

டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள தலிபான் தீவிரவாத அமைப்பின், துணை அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார், ''மலாலா துப்பாக்கி மற்றும் ஆயுத மோதல்களுக்கு எதிராக பேசி வருகிறார். நோபல் பரிசின் நிறுவனர் வெடிப்பொருட்கள் தயாரிப்பாளர் என்பது அவர், அறிந்திருக்க வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளது.