Published:Updated:

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை இலங்கையில் இன்று மீண்டும் தொடக்கம்!

கொழும்பு: இலங்கையின் வடக்குப் பகுதியில் இயங்கி வந்த 'யாழ் தேவி' ரயில் சேவை 24 ஆண்டுகளுக்குப் பிறகு  இன்று  முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு இடையேயான 400 கிலோமீட்டர் தொலைவுப் பாதையில் இந்த ரயில் இயங்குகிறது. இதன் முதல் ஓட்டத்தை அதிபர் ராஜபக்சே, தலைநகர் கொழும்பில் தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் சேவை 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1990-இல் தமிழீழப் போரின்போது நிகழ்ந்த  கண்ணிவெடி தாக்குதலால் இதன் பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து, பயணப் பாதை சுருக்கப்பட்டது.

இலங்கையின் வடக்குப் பகுதியின் புனரமைப்புக்காக இந்தியா வழங்கிய நிதி உதவியையடுத்து, இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது . ரயில் முழுவதும் குளிர் சாதன வசதி, தொலைக்காட்சி, இணையதள சேவை உள்ளது. யாழ்ப்பாணம்- கொழும்பு பயண நேரம் ஆறு மணி நேரம் ஆகும்.