Published:Updated:

அமெரிக்கா தலையீட்டை சகித்துக்கொள்ள முடியாது: சீனா

விகடன் விமர்சனக்குழு
அமெரிக்கா தலையீட்டை சகித்துக்கொள்ள முடியாது: சீனா
அமெரிக்கா தலையீட்டை சகித்துக்கொள்ள முடியாது: சீனா

பெய்ஜிங்: உள்

அமெரிக்கா தலையீட்டை சகித்துக்கொள்ள முடியாது: சீனா

நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டின் தலையீட்டையும் சகித்துக் கொள்ள முடியாது என்று சீனா கூறியுள்ளது.

இது தொடர்பாக,  சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லேய் செய்தியாளர்களிடம்  கூறுகையில், "ஹாங்காங், சீனாவின் சிறப்பு நிர்வாகத்துக்குபட்ட  பகுதி.

அங்கு நடைபெறும் விவகாரங்கள் அனைத்தும் சீன உள்நாட்டு விவகாரங்கள் ஆகும். அவற்றில் வெளிநாட்டினர் தலையிடுவதை சீனா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. எங்கள் விவகாரத்தில் தலையிட வெளிநாடுகளுக்கு உரிமையில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட நாடுகள் தேவையில்லாமல் ஹாங்காங் விவகாரத்தில் தலையிடாமல், விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். சீனாவின் இறையாண்மையை பிற நாடுகள் மதித்து நடக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில்,  ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் ஏற்படுத்தியிருந்த சாலைத் தடைகளை அகற்றும் நடவடிக்கையை காவல்துறையினர் செய்து வருகின்றனர். ஆனால்  போராட்டக்காரர்கள் புதிய தடைகளை ஏற்படுத்தி தங்கள் நிலையை பலப்படுத்திக் கொண்டதையடுத்து, மின் ரம்பங்கள், கம்பி வெட்டிகள் உள்ளிட்ட சாதனங்களுடன் தங்களது நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.