Published:Updated:

வேகமாக பரவும் எபோலா: பலி எண்ணிக்கை 4,447 ஆக உயர்வு!

வேகமாக பரவும் எபோலா: பலி எண்ணிக்கை 4,447 ஆக உயர்வு!
வேகமாக பரவும் எபோலா: பலி எண்ணிக்கை 4,447 ஆக உயர்வு!
வேகமாக பரவும் எபோலா: பலி எண்ணிக்கை 4,447 ஆக உயர்வு!

ஜெனிவா: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய்  தாக்கி  இறந்தவர்களின் எண்ணிக்கை 4,447 ஆக உயர்ந்துள்ளது.

‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய், சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும் தாக்குவதால் அந்த நாடுகளில் பெரும் பீதி நிலவுகிறது.

இந்நிலையில் இந்த நோய்க்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 4,447 ஆக உயர்ந்துள்ளது என்று  உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் இந்த நோயைக்  கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா லோன், கினியா, லைபீரியா ஆகிய நாடுகளில் அந்த நோயின் தாக்கம் குறையவில்லை.

அங்கு ‘எபோலா’ நோய் வேகமாக பரவி வருகிறது. தற்போது 8,914 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த வாரத்திற்குள்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக உயரும் அபாயம் உள்ளது என்று  உலக சுகாதார நிறுவன உதவி டைரக்டர் ஜெனரல் புரூஷ் அய்ல்லார்டு கூறி  உள்ளார் .

‘எபோலா’ நோய் தாக்கம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.