Published:Updated:

அமெரிக்க காதலரையும் உதறினார் பத்ம லக்ஷ்மி!

அமெரிக்க காதலரையும் உதறினார் பத்ம லக்ஷ்மி!
அமெரிக்க காதலரையும் உதறினார் பத்ம லக்ஷ்மி!
அமெரிக்க காதலரையும் உதறினார் பத்ம லக்ஷ்மி!

நியூயார்க்: பிரபல மாடல் அழகியான பத்ம லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே-வுடன் கொண்டிருந்த காதல் உறவை முறித்துக்கொண்டு, மீண்டும் தனியாய்  வாழ்ந்து வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது.

44 வயதான  பத்மலக்ஷ்மி  சென்னையை சேர்ந்தவர். அமெரிக்காவின்   கலிபோர்னியா மாகணத்தில் செட்டில் ஆனவர். மாடலிங் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். மேலும்   உணவு வகைகள் பற்றி   நூல் எழுதுவதிலும் கை தேர்ந்தவர்.அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் பல வெற்றிகரமான சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

தன்னைவிட வயதில் 23 வருடங்கள் மூத்தவரான   புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கசப்பில் 2007ல் உறவை   முறித்துக் கொண்டு தனியாக வாழத் தொடங்கினார்.

பின்னர் 6 மாதத்திற்கு முன்பு பிரபல ஹாலிவுட் நடிகரான ரிச்சர்ட் கிரேவுடன் காதல் வயப்பட்டு, அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். தற்போது அதிலும் பிரிவு ஏற்பட்டு, அவரைவிட்டு தனியாக வாழ்வதாக பத்ம லக்‌ஷ்மி கூறியதாக 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.