Published:Updated:

இணையதளம் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை!

விகடன் விமர்சனக்குழு
இணையதளம் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை!
இணையதளம் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை!
இணையதளம் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை!

சான்டியாகோ: சிலி நாட்டில்  பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தை, இணையதளம்  மூலம் ரூ.6,250க்கு விற்கப்பட்டுள்ளது அங்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  

பெண் குழந்தையை விலைக்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இவ்வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில், 2013 ஆம் ஆண்டு வெரோனிகா என்னும் 18 வயது பெண், பிறந்து இரு நாட்களே ஆன தனது பெண் குழந்தையை இணையதளம்  மூலம் ஜுவான் கார்லோஸ் என்பவருக்கு 102 டாலர்களுக்கு (சுமார் ரூ.6,250) விற்றதாகவும், அன்று முதல் அப்பெண் குழந்தை ஜுவான் மற்றும் அவரது துணைவியாரோடு இருந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையை விற்ற வெரோனிகாவின் கணவர் தனது குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாகக்  குழந்தையை விலைக்கு வாங்கியதாக அரசு தரப்பு ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டு தண்டனை உறுதி என தெரிய வந்துள்ளது.