Published:Updated:

இலங்கை அமைச்சர்கள் தொண்டமான்- டக்ளஸ் இடையே மோதல்!

இலங்கை அமைச்சர்கள் தொண்டமான்- டக்ளஸ் இடையே மோதல்!
இலங்கை அமைச்சர்கள் தொண்டமான்- டக்ளஸ் இடையே மோதல்!
இலங்கை அமைச்சர்கள் தொண்டமான்- டக்ளஸ் இடையே மோதல்!

கொழும்பு: இலங்கை அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமானுக்கும், டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அமைச்சரவை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

50 ஆயிரம் வீடுகளை அமைப்பது தொடர்பான யோசனைத்  திட்டத்தை, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட அளவு வீடுகள் வடக்கு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் கோரியுள்ளார்.

ஆனால் டக்ளஸின் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் தொண்டமான், இந்திய அரசு வடக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதாகவும், இந்த திட்டம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கானது என்றும் கூறியுள்ளார்.

அப்போது, பேசிய அதிபர் ராஜபக்சே, வீடமைப்பு திட்டத்தினை மலையகத்தில் முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிபர் ராஜபக்சே,  தொண்டமானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தொண்டமான், ஊவா மாகாணசபைத் தேர்தலில் பெருந்தோட்ட தமிழ் மக்களின் வாக்குகள் மூலமாகவே அரசு அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது எனவும், இதனை எப்படியாவது இல்லாமல் செய்ய டக்ளஸ் முயற்சிக்கிறார் என்றும் நேரடியாக குற்றம் சாட்டினார்.