Published:Updated:

மர்ம மனிதர்கள் விவகாரம்: இலங்கை அரசு விளக்கம்

மர்ம மனிதர்கள் விவகாரம்: இலங்கை அரசு விளக்கம்
மர்ம மனிதர்கள் விவகாரம்: இலங்கை அரசு விளக்கம்

கொழும்பு, ஆக.24,2011

மர்ம மனிதர்கள் விவகாரம்: இலங்கை அரசு விளக்கம்

மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள மர்ம மனிதர்கள் விவகாரத்துக்கும், ராணுவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

அண்மைக்காலமாக, இலங்கையில் குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்கள் மிகுதியாக வாழ்கின்ற கிழக்குப் பகுதிகளில் 'க்ரீஸ் பூதங்கள்' என்றழைக்கப்படுகின்ற மர்ம மனிதர்களில் தொல்லைகளால் மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்ற மர்ம மனிதர்கள் வலம் வருவது, இலங்கையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இலங்கையில் அவசர நிலையை தொடர்ந்து அமலில் வைத்திருப்பதற்காக, இத்தகைய பீதியை அரசு தரப்பே கிளப்பிவிட்டு, அதையொட்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் முஸ்லிம் மதகுருமாறுடன் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது கூறுகையில், "மர்ம மனிதர்களின் நடவடிக்கைகளுடன் அரசுக்கும் ராணுவத்தக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

இந்த மர்ம நடவடிக்கைகள் ராணுவத்தினராலோ அல்லது பொலிஸாராலோ மேற்கொள்ளப்படுபவை அல்ல. குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களே இதன் பின்னணியில் உள்ளன.

மர்ம மனிதர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ராணுவ முகாம்களை பொதுமக்கள் தாக்கியச் சம்பவங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளே. விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களே முகாம்களைத் தாக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் இருக்கின்றனர்.

அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக அரசே இந்த மர்ம நடவடிக்கைளின் பின்னணியில் இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு காவல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய நபர்களை கைது செய்ய முயற்சிக்கும் காவல்துறையினரை பொதுமக்கள் தாக்குகின்ற காரணத்தினாலேயே குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கோத்தபய கூறியுள்ளார்.

ரணில் கேள்வி...

இதனிடையே, க்ரீஸ் பூதப் பிரச்னைக்கு அரசின் தீர்வு நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், க்ரீஸ் பூதப் பிரச்னையுடன் தொடர்புடைய எவரையும் காவல்துறையினர் இதுவரையில் கைது செய்யவில்லை என்றும், அண்மையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களை கைது செய்துள்ள காவல்துறை, க்ரீஸ் பூத அச்சுறுத்தல்களை மேற்கொள்ளும் நபர்களை கைது செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு