Published:Updated:

வெர்ஜினியாவில் நிலநடுக்கம்: நியூயார்க்கிலும் அதிர்வு!

நியூயார்க், ஆக.24,2011

அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, நியூயார்க் மற்றும் வாஷிங்டனிலும் உணரப்பட்டது. ##~~##

இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களும் வீடுகளும் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து மக்களிடையே பீதி நிலவியது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு அணு உலைகள் நிறுத்தப்பட்டன. 

அடுத்த கட்டுரைக்கு