Published:Updated:

முதல் 'மூளை நுண்செயலி'யை கண்டுபிடித்தது ஐ.பி.எம்!

- தமிழ் பிரபாகரன்

ஆக.24,2011 

முதல் 'மூளை நுண்செயலி'யை கண்டுபிடித்தது ஐ.பி.எம்!

கடந்த ஆறு ஆண்டுகளாக நூறு விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்ந்து மூளை நுண்செயலியை (MicroProcessor) கண்டிபிடித்துள்ளது, ஐ.பி.எம். ##~~##

மனித மூளையின் செயற்பாடுகளை முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்படும் இந்த மூளை நுண்செயலிகளை 'அறிவாற்றலுடைய கணினியம்' (Cognitive Computing) என்று தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிடுகின்றனர்.

இந்த கணினியம் மனித செயல்பாடுகளையும், சுற்றுப்புற செயல்களையும் கண்காணிக்கவும் உதவுகிறது.     

இது குறித்து ஐ.பி.எம். திட்ட இயக்கனர் 'தர்மேந்திர மோதா' விளக்குகையில், மூளை நுண்செயலிகளில் மேலும் மனிதனுக்கான உணர்ச்சி, மனித அறிவாற்றல் போன்றவைகளை நுண்செயலியில் மாற்றி அமைக்க உள்ளோம்.

அதாவது, மனிதனுக்கான கோபம், மகிழ்ச்சி, கவலை என அனைத்து உணர்ச்சிகளையும் நுண்செயலிகளில் செயல்படுத்தப் போவதாக கூறினார்.

இந்த மூளை நுண்செயலி 'நரம்புகளின் நியூட்ரோன் முனை அமைப்பினை (SynapseSystem) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நரம்பியல் கணினிய சிப்புகளை முன்மாதிரிகளாக உள்ளடக்கியுள்ளது.

நரம்பியல் கணினிய சிப்புகள் ஒன்றில் 262,144 நிரல்படு நரம்புகளும் (Programmable Synapse) மற்றொன்றில் 65,536 கற்றல் நரம்புகளும் (Learning Synapse ) இணைக்கப்பட்டுள்ளது.

இந்த 'மூளை நுண்செயலி'யின் கண்டுப்பிடிப்பு 'செயற்கை நுண்ணறிவு'க்கு (Artificial Intelligence ) அடிப்படையாக அமையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை அளித்துள்ளனர். 

ஐ.பி.எம்.யின் 'மூளை நுண்செயலி' திட்டத்துக்காக 'அமெரிக்க பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டகம்' (DARPA) 21 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு