Published:Updated:

நீதி கோரி ஐ.நா.சபை முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்!

Vikatan Correspondent
நீதி கோரி ஐ.நா.சபை முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்!
நீதி கோரி ஐ.நா.சபை முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்!
நீதி கோரி ஐ.நா.சபை முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க்: 1984ம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஐ.நா.சபை முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் 30வது நினைவு தினத்தையொட்டி அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் ஐ.நா. சபையை நோக்கி பேரணி நடத்தினர்.

‘நீதிக்கான சீக்கியர்கள்’ மற்றும் ‘நவம்பர் 1984 சீக்கிய இனப்படுகொலை’ ஆகிய அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான சீக்கியர்கள், நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்துக்கு பேரணியாக வந்தனர். பின்னர் அவர்கள் ஐ.நா. சபைக்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஸ்டென்பானோ சென்சியை சந்தித்த போராட்டக்காரர்கள், இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர். மேலும், கலவரத்தின்போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கான வீடியோ ஆதாரங்களையும் அவர்கள் வழங்கினர்.