Published:Updated:

தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிப்பு: இலங்கை அமைச்சர் தகவல்!

Vikatan Correspondent
தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிப்பு: இலங்கை அமைச்சர் தகவல்!
தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிப்பு: இலங்கை அமைச்சர் தகவல்!
தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிப்பு: இலங்கை அமைச்சர் தகவல்!

கொழும்பு: தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட  தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ராமேஸ்வரம் மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து பேருக்கு, கடந்த 30 ஆம் தேதி கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மீனவர்களை விடுவிக்க கோரி  போராட்டங்களை நடத்தி வந்தன.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் 15 நாள் காலஅவகாசம் அளித்தது.

இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் 3 நாளில் விடுவிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இலங்கை தொலை தொடர்புத் துறை அமைச்சர் பிரபா கணேஷ் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த பின் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மீனவர்களின் தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அதிபர் ராஜபக்சே கூறியதாகவும், அப்படி மேல்முறையீடு செய்தால், தமிழக மீனவர்கள் விடுதலை ஆவதில் மேலும் கால தாமதம் ஆகும் என்றும், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக  அதிபர் ராஜபக்சே உறுதி அளித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தி தமிழக மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.