Published:Updated:

தென்கொரியா படகு விபத்தில் 300 பேர் பலி: கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!

Vikatan Correspondent
தென்கொரியா படகு விபத்தில் 300 பேர் பலி: கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!
தென்கொரியா படகு விபத்தில் 300 பேர் பலி: கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!
தென்கொரியா படகு விபத்தில் 300 பேர் பலி: கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!

சியோல்: தென்கொரியாவில் 300க்கும் மேற்பட்டோர் பலியான படகு விபத்து தொடர்பான வழக்கில், படகின் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி ஜீஜு தீவுகளை நோக்கி 476 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 300 பேர் பரிதாபமாக பலியானார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள்.

இது தொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில், பல உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த படகு கேப்டன் மீது கொலைக் குற்றம் சுமத்திய வழக்கறிஞர்கள், அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதனை ஏற்காத நீதிபதிகள், விபத்திற்கு அவர் மட்டுமே முழுமையான காரணம் என்று குற்றம் சுமத்த முடியாது. கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இருந்ததாகக் கருத முடியாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், படகின் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்ட அந்நாட்டு நீதிபதிகள், படகின் தலைமைப் பொறியாளர் பார்க்குக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பணியாளர் குழுவைச் சேர்ந்த 13 பேருக்கு கடல் போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.