Published:Updated:

குளிரில் நடுங்கிய சீன அதிபரின் மனைவி: கோட் அணிவித்த ரஷ்ய அதிபர்!

Vikatan Correspondent
குளிரில் நடுங்கிய சீன அதிபரின் மனைவி: கோட் அணிவித்த ரஷ்ய அதிபர்!
குளிரில் நடுங்கிய சீன அதிபரின் மனைவி: கோட் அணிவித்த ரஷ்ய அதிபர்!
குளிரில் நடுங்கிய சீன அதிபரின் மனைவி: கோட் அணிவித்த ரஷ்ய அதிபர்!

பெய்ஜிங் : குளிரில் நடுங்கிய சீன அதிபரின் மனைவிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தனது கோட்டை அணிவித்ததால்   பெய்ஜிங்  மாநாட்டில்  பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின்   தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற, 'அபெக்' மாநாட்டின் போது, நடந்த இந்த நிகழ்வால் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களிடையே  ஆச்சரியம் ஏற்பட்டது.
சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில், நேற்று முன்தினம், 'அபெக்' என, அழைக்கப்படும், ஆசியா - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர்  ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்கள் பலர்  பங்கேற்றனர்.
மாநாட்டு மேடையில், அதிபர் ஒபாமா மற்றும் அதிபர் விளாதிமிர் புதினுக்கு நடுவே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அவரின் மனைவி, பெங் லியூவானும் அமர்ந்திருந்தனர்.
ஒரு கட்டத்தில், அதிபர் ஒபாமாவும், ஜின்பிங்கும் பேசிக் கொண்டிருந்த போது, ஜின்பிங்கின் மனைவி லியூவானுடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேசினார். மாநாடு நடைபெற்ற இடம், 2008ல், பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது நீச்சல் போட்டிகளுக்காக கட்டப்பட்ட கட்டடம் என்பதால், லியூவான் குளிரில் லேசாக நடுங்கினார்.
அத்துடன், 'இங்கு ரொம்ப குளிரா இருக்குல்ல' என, தன்னுடன் பேசிக் கொண்டிருந்த அதிபர் புதினிடம் கூறினார். உடன், எழுந்த அதிபர் புதின், தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி, லியூவானுக்கு மாட்டி விட்டார். லியூவானும் அதை மகிழ்ச்சியாக ஏற்று, புடினுக்கு நன்றி தெரிவித்து அமர்ந்தார்.

இந்த நிகழ்வை, ஊடகங்கள் எல்லாம் படம் பிடித்து பெரிய அளவில் வெளியிட்டன. சமூக வலைத் தளங்களில், இதுதொடர்பான வீடியோ பதிவுகளும் வெளியாகின.  அதிர்ச்சி அடைந்த சீன அரசு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவாமல் தணிக்கை செய்து விட்டது..
கடந்த ஏப்ரல் மாதம் தான் , தன் மனைவியை விவாகரத்து செய்த விளாதிமிர் புதின், அதன்பின், திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.