Election bannerElection banner
Published:Updated:

புதிய நாணயத்தை உருவாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் முடிவு!

புதிய நாணயத்தை உருவாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் முடிவு!
புதிய நாணயத்தை உருவாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் முடிவு!

புதிய நாணயத்தை உருவாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் முடிவு!

பாக்தாத்: தங்கம், வெள்ளி, மற்றும் செம்புவில் தங்களுக்காக புதிய நாணயத்தை உருவாக்க ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக் மற்றும் சிரியாவில் போர் தொடுத்து, அந்த நாடுகளின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். அந்தப் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய நாடு என்று அறிவித்துள்ளனர். மேலும், பல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு, எண்ணெய் விற்பனை, பிணைக் கைதிகள், வரி மற்றும் திருடப்பட்ட கலைப்பொருட்கள் விற்பனை மூலம் நிதி கிடைத்து வருகிறது.

புதிய நாணயத்தை உருவாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் முடிவு!

இந்நிலையில், தங்களுக்காக புதிய நாணயத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தங்கத்திலான இரண்டு நாணயங்கள், வெள்ளியில் மூன்று நாணயங்கள், செம்புவில் இரண்டு நாணயங்கள் என மொத்தம் ஏழு நாணயங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த நடவடிக்கை, கடவுளுக்கு முற்றிலும் அர்ப்பணித்து, சாத்தான்களின் வட்டியை அடிப்படையாகக் கொண்ட உலகப் பொருளாதார அமைப்பில் இருந்து இஸ்லாமியர்களை நீக்கும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய நாணயத்தின் மாற்று விகிதம் மற்றும் நாணயம் கிடைக்கும் இடங்கள் தொடர்பாக விளக்கம் அளித்து மற்றொரு அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு