Published:Updated:

சமூக வலைத் தளங்களில் ஜிகாதிகள்: பதிவுகளை நீக்க இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்!

லண்டன்: சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,டுவிட்டர்,கூகுள் உள்ளிட்டவற்றில் இருந்து தீவிரவாத அமைப்பினரின் பதிவுகள், படங்களை நீக்கவேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரன் வலியுறுத்தி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் டேவிட் கேமரூன், மேற்குலக நாடுகள் தற்போது மத அடிப்படைவாத இயக்கத்தின்  `ஜிகாதிகள்` மூலம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. எனவே அவர்களின் பதிவுகளை பேஸ்புக், டுவிட்டர், கூகுள் ஆகியவற்றில் இருந்து நீக்கிட வேண்டும். நீக்க வேண்டிய சமூகப் பொறுப்பு இந்த இணையதள நிறுவனங்களுக்கு உண்டு என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், இங்கிலாந்து நாட்டில் காவல்துறையும், உளவுத்துறை பிரிவினரும் இணைந்து இணையதளங்களில் இயங்கும் ஜிகாதிகளில் 1000 பேரின் படங்கள், கருத்துக்கள், பதிவுகளை நீக்கி உள்ளார்கள். 80 விழுக்காடு ஜிகாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் இருந்துதான் இயங்குகிறார்கள் என்று கூறினார்.  

பின் செல்ல