Published:Updated:

விடுதலைப்புலிகளுக்கு தடை நீக்கம்: மேல்முறையீடு இல்லை என இலங்கை தகவல்!

கொழும்பு: விடுதலைப்புலிகளுக்கு தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும், விடுதலைப் புலிகளுக்கான தடைநீக்கம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல எழுப்பிய கேள்விக்கு ஜி.எல்.பெரீஸ் இவ்வாறு பதில் அளித்தார்.

இதனிடையே, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளார் என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் ஜி.எல்.பெரீஸ் அறிவித்தார். இதுதொடர்பாக, இந்திய உயரதிகாரிகள், ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாகவும் அவர் கூறினார்.