Published:Updated:

உலகில் பசுமையை அதிகரிக்க ஒபாமா 3 பில்லியன் டாலர்கள் நிதிஉதவி!

உலகில் பசுமையை அதிகரிக்க ஒபாமா 3 பில்லியன் டாலர்கள் நிதிஉதவி!
உலகில் பசுமையை அதிகரிக்க ஒபாமா 3 பில்லியன் டாலர்கள் நிதிஉதவி!
உலகில் பசுமையை அதிகரிக்க ஒபாமா 3 பில்லியன் டாலர்கள் நிதிஉதவி!

பிரிஸ்பன்: பூமி வெப்பமய மாதலால் குறைந்து வரும் பசுமைச் சூழல்களை அதிகரித்திட அமெரிக்க அதிபர் ஒபாமா 3 பில்லியன் டாலர்களை பசுமைக் காலநிலை நிதியத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, வளரும் நாடுகளில் மேற்கொள்ளப் படும் பசுமை நிதியத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க அமெரிக்காவின் பங்களிப்பாக 3 பில்லியன் டாலர்களை வழங்கப்படும். இது உலக பசுமைக் காலநிலையை அதிகரிக்க  அமெரிக்கா  எடுத்துவைக்கும் முக்கியமான அடி என்று கூறினார்.

இந்த நிதியத்திற்கு மற்ற நாடுகள் நிதி வழங்கிட இம்மாதம் 20 ஆம் தேதியை இறுதி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.