Published:Updated:

மோடியை கட்டித் தழுவி வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர்!

விகடன் விமர்சனக்குழு
மோடியை கட்டித் தழுவி வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர்!
மோடியை கட்டித் தழுவி வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர்!
மோடியை கட்டித் தழுவி வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர்!

பிரிஸ்பன்:  ஜி 20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடியை ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபாட் கட்டித் தழுவி வரவேற்றார்.

தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின்  வளர்ந்த  20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாடு   ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க  பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு  சென்றுள்ளார்.

இந்த ஜி-20 மாநாட்டை நடத்தும் நாடு என்ற வகையில், மாநாட்டு அரங்கத்துக்குள் நுழைந்த ஒவ்வொரு நாட்டின் தலைவரும் தங்களை வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டுடன் கை குலுக்கிவிட்டு, அவருடன் நின்று புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்துவிட்டு, தங்களது இருக்கைக்கு அமரச் சென்றனர்.

அவ்வரிசையில், மாநாட்டு அரங்கத்துக்குள் நுழைந்த இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியும், டோனி அபாட்டுடன் கை குலுக்க வலது கரத்தை நீட்டினார்.

மோடியின் கரத்தைப்பற்றிய டோனி அபாட், அவரை அருகே அழைத்து, மார்போடு சேர்த்து ஆரத்தழுவி வரவேற்றார். வேறு எந்த நாட்டின் தலைவர்களும் அளிக்காத உள்ளப்பூர்வமான வரவேற்பு மோடிக்கு அளிக்கப்பட்டதைக் கண்ட புகைப்படக் கலைஞர்கள், இந்த அபூர்வக் காட்சியை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.