Published:Updated:

விக்கிலீக்ஸ் மீது தொடரும் சைபர் தாக்குதல்!

விக்கிலீக்ஸ் மீது தொடரும் சைபர் தாக்குதல்!
விக்கிலீக்ஸ் மீது தொடரும் சைபர் தாக்குதல்!

லண்டன், ஆக.31,2011

விக்கிலீக்ஸ் மீது தொடரும் சைபர் தாக்குதல்!

அமெரிக்க தூதரங்களின் ஆயிரக்கணக்கான கேபிள்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் வலைத்தளம் தொடர்ந்து சைபர் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. ##~~##

'WikiLeaks.org தளம் தற்போது சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது' என விக்கிலீக்ஸ்சின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ஒரு மணி நேரம் கழித்து, வலைத்தளம் பாதுகாப்பாகவுள்ளது என்றும், அனைத்து கேபிள்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் விக்கிலீக்ஸ் அறிவித்தது.

அமெரிக்க தூதரங்களின் கேபிள்களை வெளியிட்டதன் தொடர்ச்சியாக, அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குற்றச்சாட்டு.

முன்னெச்சரிக்கையாக, அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வேறு சில வலைத்தளங்களில் பாதுகாத்து வருகிறது விக்கிலீக்ஸ்.

இந்த சைபர் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் கண்டறியப்படாத விஷயமாகவே உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு