Published:Updated:

கடாபி ஆதரவாளர்களுக்கு கெடு: லிபியாவில் பதற்றம்

கடாபி ஆதரவாளர்களுக்கு கெடு: லிபியாவில் பதற்றம்

கடாபி ஆதரவாளர்களுக்கு கெடு: லிபியாவில் பதற்றம்

கடாபி ஆதரவாளர்களுக்கு கெடு: லிபியாவில் பதற்றம்

Published:Updated:

டிரிபோலி, ஆக.31,2011

கடாபி ஆதரவாளர்கள் அனைவரும் 4 நாட்களுக்குள் சரணடையும்படி கிளர்ச்சியாளர்கள்  கெடு விதித்திருப்பது, லிபியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ##~~##

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக பெரும் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் புரட்சிப்படைத் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல், கடாபி ஆதரவாளர்கள் அனைவரும் 4 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என கெடு விதித்தார்.

அவ்வாறு அவர்கள் சரணடையவில்லை என்றால், கடாபி ஆதரவாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்‍க நேரிடுமென்றும் அவர் எச்சரித்தார்.

கடாபி குடும்பத்தினர், அல்ஜீரியா நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பது பற்றி அவர் கூறுகையில், அந்நாட்டு அரசு உடனடியாக அவர்களை லிபியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

லிபியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், அல்ஜீரியா ஈடுபடாது என தாம் நம்புவதாகவும் அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

இதனிடையே, லிபியாவில் சர்வதேச படைகளை நிலைநிறுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டின் இடைக்கால அரசு கூறியுள்ளது.