Published:Updated:

மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு: இளவரசர் ஆண்ட்ரூவை விசாரிக்க கோரிக்கை!

மைனர்  பெண்ணுடன் பாலியல் உறவு: இளவரசர் ஆண்ட்ரூவை விசாரிக்க கோரிக்கை!
மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு: இளவரசர் ஆண்ட்ரூவை விசாரிக்க கோரிக்கை!
மைனர்  பெண்ணுடன் பாலியல் உறவு: இளவரசர் ஆண்ட்ரூவை விசாரிக்க கோரிக்கை!

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஆண்ட்ரூ, மைனர் பெண்ணிடம்  பாலியல் உறவு கொண்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில் நீதிமன்றம் அவரை விசாரிக்க வேண்டும் என்று பெண்ணின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதால், உலகம் முழுவதும் இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ள பாதிக்கப்பட்ட பெண்  விர்ஜினியா ராபர்ட்ஸுக்கு ஆதரவாக அவரின்  தந்தை ஸ்கை ராபர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

"பருவ வயதை எட்டாத போது, எனது மகள் விர்ஜினியாவிடம் இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் உறவு கொண்டிருந்தால், நீதிமன்றம் ஆண்ட்ரூவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். எதற்காக எனது மகள் பொய் சொல்லவேண்டும், அவள் எப்பொழுதும் உண்மையைத் தான் கூறுவாள்" என்று ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து அரண்மனை தரப்பு, விர்ஜினியாவின் கூற்றை மறுத்துள்ளது. ராணியை விர்ஜினியா சந்தித்ததற்கான எவ்வித ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று அரண்மனை செய்தித்  தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விர்ஜினியா தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 1999-2002 ஆம் ஆண்டு  கால கட்டத்தில் என்னை ஜெப்ரே ஒரு பாலியல்  அடிமையாக வைத்திருந்தார். அப்போது அவர் என்னை லண்டன், நியூயார்க், கரீபியன் தீவு ஆகிய இடங்களில்  இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவுடன் வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவு கொள்ளவைத்தார். எத்தனையோ சிறுவயது பெண்களுடனான களியாட்டத்தின்  ஒரு பகுதியாக இது நடந்தது" என்று கூறப்பட்டிருந்தது.

ஆண்ட்ரூவிடம் விர்ஜினியாவை அறிமுகப்படுத்திய ஜெப்ரேவுக்கு, பருவ வயதை எட்டாத மைனர் பெண் ஒருவரை ஏமாற்றி  விபச்சாரத்தில் ஈடுபட வைத்தார் என்று கூறி அமெரிக்க நீதிமன்றம் கடந்த 2008 ஆம் ஆண்டு 18 மாத சிறைத்  தண்டனை விதித்தது  குறிப்பிடத்தக்கது.