Published:Updated:

கட்சி தலைவர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகல்!

Vikatan Correspondent
கட்சி தலைவர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகல்!
கட்சி தலைவர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகல்!
கட்சி தலைவர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகல்!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததன் எதிரொலியாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சே விலகுவதாக அறிவித்துள்ளார்.

ராஜபக்சே அதிபராக அதிபராகப் பதவி வகித்தபோது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் இருந்தார். தற்போதைய அதிபர் சிறிசேனா, அக்கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்தார்.

அதிபருக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ராஜபக்சேவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சிறிசேனா, தனது பதவியிலிருந்து விலகி அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

சிறிசேனாவை தொடர்ந்து, கட்சியின் பல முக்கிய தலைவர்களும், ராஜபக்சேவின் அணியிலிருந்து விலகி, சிறிசேனா அணியில் இணைந்தனர். அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் துணையுடன் சிறிசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவிடம் நான் ஒப்படைக்கிறேன். கட்சி பிளவுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, அதை நான் விரும்பவில்லை. கட்சியில் பல பதவிகளை வகித்துள்ளேன். 50 ஆண்டு காலமாக கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளேன்.

நாட்டை பல ஆண்டுகளாக காப்பாற்றி வந்த கட்சி ஓற்றுமையாக செயல்பட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்" என்று கூறி உள்ளார்.