Published:Updated:

ராணுவத்திடம் இருந்த தமிழர்களின் நிலங்கள் விடுவிப்பு: இலங்கை அரசு அறிவிப்பு!

Vikatan Correspondent
ராணுவத்திடம் இருந்த தமிழர்களின் நிலங்கள் விடுவிப்பு: இலங்கை அரசு அறிவிப்பு!
ராணுவத்திடம் இருந்த தமிழர்களின் நிலங்கள் விடுவிப்பு: இலங்கை அரசு அறிவிப்பு!

கொழும்பு: இலங்கையில், ராணுவத்தின் வசம் உள்ள நிலப்பகுதிகள் விடுவிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
 

ராணுவத்திடம் இருந்த தமிழர்களின் நிலங்கள் விடுவிப்பு: இலங்கை அரசு அறிவிப்பு!

இது தொடர்பாக பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ருவன் வணிகசூரிய, வடக்குப் பகுதியில் 26 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ராணுவத்தின் வசம் உள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாண பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாப்புப் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் ஏக்கர் மட்டுமே ராணுவத்தின் வசம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலங்கள் விடுவிக்கப்படுவது முறையான நெறிமுறையின் கீழ் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.