Published:Updated:

இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடியவர் உயிரிழந்த பரிதாபம்!

Vikatan Correspondent
இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடியவர் உயிரிழந்த பரிதாபம்!
இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடியவர் உயிரிழந்த பரிதாபம்!
இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடியவர் உயிரிழந்த பரிதாபம்!

தைபே: தைவான் நாட்டில் இடைவிடாமல் இன்டர்நெட் விடியோ கேம் விளையாடியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சியே என்ற அந்த வாலிபர், கௌசியுங் நகரில் உள்ள இன்டர்நெட் கபே ஒன்றில்  வீடியோ கேம் விளையாடுவது  வழக்கம்.
இந்நிலையில் இன்டர்நெட் மையம் வந்த  சியே தனது இருக்கையில் அசைவற்றுக்கிடந்துள்ளார். வழக்கமாக வீடியோ கேம் விளையாடிய அசதியில் சியே அப்படி தூங்குவார் என்பதால், அவரை பார்த்த ஊழியர்கள் அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்றே நினைத்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமானதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவர் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவரது மூச்சு நின்றுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் சியேவின் இதயம் செயலிழந்து விட்டதாகத்  தெரிவித்தனர்.  32 வயதான சியே தொடர்ந்து மூன்று நாட்களாக   வீடியோ கேம் விளையாடியதே அவரது மரணத்திற்கு காரணமென்றும் தெரிவித்தனர்.

இதேபோல் புதிய தைபே நகரத்தில் உள்ள இன்டர்நெட் மையம் ஒன்றில் இதே போல் 38 வயதான நபர் ஒருவர் ஐந்து நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய பிறகு கடந்த 1 ஆம் தேதி மரணமடைந்துள்ளார். தைவானில் அடுத்தடுத்து வீடியோ கேம் ஆடுபவர்கள் மரணம் அடைவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.