Published:Updated:

பசில் ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர் ஊழல் புகார்!

Vikatan Correspondent
பசில்  ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர் ஊழல் புகார்!
பசில் ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர் ஊழல் புகார்!
பசில்  ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர் ஊழல் புகார்!

கொழும்பு: முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்கள் பசில் ராஜபக்சே, கோத்தபய மீது முன்னாள் அமைச்சர் ஒருவர் ஊழல் புகார் அளித்துள்ளார்.

இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்சேவும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக கோத்தபாய ராஜபக்சேவும் இருந்தனர்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் ராஜபக்சே மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டது. அவரது மூன்று மகன்கள் மீது பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

ராஜபக்சே மற்றும் அவரது மகன்கள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், தற்போது, அவரது சகோதர்கள் கோத்தபய, பசில் ராஜபக்சே ஆகியோர் மீது அவரது ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ஒருவரே ஊழல் புகார் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கோத்தபய, பசில் ராஜபக்சே ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.