Published:Updated:

பாகிஸ்தானில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போட்டோ கிராபர் பலி!

Vikatan Correspondent
பாகிஸ்தானில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போட்டோ கிராபர் பலி!
பாகிஸ்தானில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போட்டோ கிராபர் பலி!
பாகிஸ்தானில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போட்டோ கிராபர் பலி!

கராச்சி: பாகிஸ்தானில் நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போட்டோகிராபர் சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் `சார்லி ஹெப்டோ`  இதழ் நபிகள் நாயகம் குறித்து கேலி சித்திரங்களை வெளியிட்டு வந்தது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துன. இதனையடுத்து  சென்ற மாதம்   சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது 2 தீவிரவாதிகள் நடத்திய ஆயுத தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் இயங்கும் அல்கய்தா அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்நிலையில்,  தீவிரவாதிகளின் தக்குதலைக்  கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டன தீர்மானம் கொண்டு வந்தார். பிரதமர் நவாஸ் ஷெரீப் கொண்டு வந்த கண்டன தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சியில் பிரெஞ்சு தூதரகம் முன்பு ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் மாணவர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை பிரெஞ்சு பத்திரிகையின் பாகிஸ்தான் புகைப்படக்காரர் ஆசீப் ஹசன்  உள்ளிட்ட  பல்வேறு பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்து கொண்டிருந்தனர்.

அப்போது தீடிரென ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப் படுத்த போலீசார் தடியடி நடத்தியும் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் அணியினர், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது  பிரெஞ்சு பத்திரிக்கை போட்டோ கிராபர் ஆசீப் ஹசன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து,     பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.