Published:Updated:

சிறிசேனா பெயரில் போலி ஆவணம் தயாரிப்பு: இலங்கை முன்னாள் அமைச்சர் கைது!

சிறிசேனா பெயரில் போலி ஆவணம் தயாரிப்பு: இலங்கை முன்னாள் அமைச்சர் கைது!
சிறிசேனா பெயரில் போலி ஆவணம் தயாரிப்பு: இலங்கை முன்னாள் அமைச்சர் கைது!
சிறிசேனா பெயரில் போலி ஆவணம் தயாரிப்பு: இலங்கை முன்னாள் அமைச்சர் கைது!

கொழும்பு: இலங்கை அதிபர் சிறிசேனா, விக்கிரமசிங்கே பெயரில் ஆவணம் தயாரித்து வெளியிட்டதாக இலங்கை முன்னாள் அமைச்சர் திசா அட்டநாயகே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ராஜபக்சேவின் ஆட்சியின்போது சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் திசா அட்டநாயகே. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இவர், இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி ராஜபக்சே கட்சியில் சேர்ந்தார்.

இந்நிலையில், அதிபர் தேர்தல் சமயத்தில், 13வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி, தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக சிறிசேனாவுக்கும், ரனில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக ஆவணம் ஒன்றை திசா அட்டநாயகே வெளியிட்டார். மேலும், அந்த ஆவணத்தில் சிறிசேனாவும், ரனில் விக்கிரமசிங்கேவும் கையெழுத்திட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த சிறிசேனாவும், ரனில் விக்கிரமசிங்கேவும் அந்த ஆவணத்தில் உள்ள கையெழுத்து தங்கள் கையெழுத்து அல்ல என்றும் போலியானது என்றும் கூறி புகார் செய்தனர்.

இந்நிலையில், போலியான ஆவணத்தை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் திசா அட்டநாயகேவை கொழும்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த தகவலை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்துள்ளார்.