Published:Updated:

கோயிலில் நிர்வாண படம் எடுத்து கொண்ட சகோதரிகள்!

கோயிலில் நிர்வாண படம் எடுத்து கொண்ட சகோதரிகள்!
கோயிலில் நிர்வாண படம் எடுத்து கொண்ட சகோதரிகள்!
கோயிலில் நிர்வாண படம் எடுத்து கொண்ட சகோதரிகள்!

கம்போடியா: அங்கோர்வாட் கோயிலில் நிர்வாண படம் எடுத்து கொண்ட சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோயில் கம்போடியா நாட்டில் உள்ளது. இந்தக் கோயில், இந்துக் கோயிலாக இருந்து புத்த மதக் கோயிலாக மாறிய கோயில். சர்வதேச பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்தக் கோயிலைக் காண, உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்,

இதேபோல், அமெரிக்காவில் இருந்து வந்த லின்ட்சே ஆதம்ஸ் (22), லெஸ்லீ (20) ஆகிய இரு சகோதரிகளும் இந்த கோயிலை காண வந்தனர். அப்போது அவர்கள் இருவரும், கோயில் வளாகத்தில் உடலில் எந்தவொரு உடையும் இன்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த தகவல் அறிந்து அந்த சகோதரிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாங்கள் செய்தது தவறுதான் என அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் இந்தக் கோயில் வளாகத்தில் இப்படி நிர்வாணப் படம் எடுத்துக் கொண்டவர்கள் பிடிபடுவது இது 2வது முறை.

இந்தக் கோயில் வளாகத்தில் இதேபோல் நிர்வாணப் படம் எடுத்துக்கொண்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களும் இவர்களைப்போல், தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து உடனே நாடு கடத்தப்பட்டனர்.