Published:Updated:

புலிகளின் வான் தாக்குதலுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் ராஜபக்சே ஒளிந்தது அம்பலம்!

விகடன் விமர்சனக்குழு

கொழும்பு: விடுதலைப்புலிகளுடனான போரின் போது விமான தாக்குதலுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழிக்குள் ஒளிந்து கிடந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு மர்மங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அதிபர் மாளிகையில், நிலத்துக்கு அடியில் பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போர் நடந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக பதுங்கு குழிகள் அமைத்து ராஜபக்சே ஒளிந்து கிடந்ததாகவும் தற்போது அம்பலமாகியுள்ளது.

கான்கிரீட்டினால் பதுங்குழிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.