Published:Updated:

'இந்தியன் முஜாஹிதீன்' பயங்கரவாத அமைப்பு: யு.எஸ்.

வாஷிங்டன், செப்.16,2011

இந்தியாவில் இருந்து செயல்பட்டு வரும் 'இந்தியன் முஜாஹிதீன்' 'வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக' அமெரிக்கா அறிவித்துள்ளது. ##~~##

இந்தியாவில் அப்பாவி மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி இருப்பதாகவும், கடந்த ஜுலை 13-ம் தேதி நடந்த மும்பை குண்டுவெடிப்பிலும் அந்த இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு மீது பொருளாதார தடை விதிக்கும் அறிவிப்பையும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்டார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் இந்தியன் முஜாஹிதீனுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலிலும் இந்தியன் முஜாஹிதீனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியன் முஜாஹிதீனை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு இந்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.