Published:Updated:

ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்: அதிர வைக்கும் வளர்ச்சி!

விகடன் விமர்சனக்குழு
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்: அதிர வைக்கும் வளர்ச்சி!
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்: அதிர வைக்கும் வளர்ச்சி!
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்: அதிர வைக்கும் வளர்ச்சி!

வாஷிங்டன்: மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 20 ஆயிரம் பேர் ஐ.எஸ்.ஸில் இணைந்துள்ளனர் என்று ஜான் கெர்ரி கூறி உள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேசும்போது, ''ஐ.எஸ்.ஸில் இணைந்து ஈராக், சிரியாவில் சண்டையிடுவதற்காக, முன்னெப்போதையும்விட, அதிக அளவில் ஆட்கள் செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஈராக், சிரியாவில் சண்டை தொடங்கியது முதல், நூறுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்றுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஐ.எஸ்.ஸில் இணைந்து சண்டையிட இந்தியாவிலிருந்தும் சென்றுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுமார் 4,000 பேர் இணைந்து சண்டையிட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் 1980களில் சண்டை நடைபெற்றபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20,000 பேர் அங்கு சண்டையிடச் சென்றனர். ஆனால், அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கு அவர்களுக்கு 10 ஆண்டுகள் காலமாயிற்று. தற்போது சிரியா, ஈராக்கில் சண்டையிட்டு வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை 3 முதல் 4 ஆண்டுகளிலேயே எட்டி உள்ளது" என்றார்.