Published:Updated:

ஆப்கான் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலை!

ஆப்கான் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலை!
ஆப்கான் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலை!

காபூல், செப்.21,2011

ஆப்கான் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலை!

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் புரானுதின் ரப்பானி தற்கொலைப் படை தாக்குதலில் தாலிபான்களால் கொல்லப்பட்டார். ##~~##

கடந்த ஓராண்டாக, தாலிபான்களுடனான போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான ஆப்கானிஸ்தான் சமாதான குழுவின் தலைவராக இவர் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் காபூலில் ரப்பானியின் வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ரப்பானி சம்பவ இடத்திலேயே பலியானார்.  அவரது வீட்டில் இருந்த தற்போதைய அதிபர் அமீது கர்சாயின் மூத்த ஆலோசகர் மசூம் ஸ்டேனக்சாயும் பலத்த காயம் அடைந்தார்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானி 1990-களில் அதிபராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு