Published:Updated:

பலாத்கார சம்பவங்களால் இந்திய மாணவருக்கு அனுமதி மறுத்த ஜெர்மனி!

Vikatan Correspondent
பலாத்கார சம்பவங்களால் இந்திய மாணவருக்கு அனுமதி மறுத்த ஜெர்மனி!
பலாத்கார சம்பவங்களால் இந்திய மாணவருக்கு அனுமதி மறுத்த ஜெர்மனி!
பலாத்கார சம்பவங்களால் இந்திய மாணவருக்கு அனுமதி மறுத்த ஜெர்மனி!

பெர்லின்: இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் படிக்க இந்திய மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பாலியல் பலாத்கார சம்பவங்களை தொடர்ந்து ஜெர்மனி நாட்டுக்கு கல்வி கற்க சென்ற இந்திய மாணவரை பாதித்து இருக்கிறது. ஜெர்மனியில் லீப்ஜிக் என்ற பழமையான பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியை பெக் சிக்கிங்கரிடம் உயிரிவேதியியல் துறையில் மேல் படிப்பில் சேர இந்திய மாணவர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பத்தை பேராசிரியை பெக் நிராகரித்துள்ளார்.

இந்த பேராசிரியை சொல்லும் காரணத்தை கேட்டால் சற்று சிந்திக்க வேண்டிதுதான். "இந்தியாவில் அதிக அளவில் நடைபெறும் பாலியல் பலாத்கார சம்பவங்களின் காரணமாக பிஎச்.டி. படிப்புக்கான அவரது விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டேன்" என அந்த பேராசிரியை கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேராசிரியைக்கும், பாதிக்கப்பட்ட மாணவருக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களை, அவரது சக மாணவர் ஒருவர் அம்பலப்படுத்தியதை தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து, பேராசிரியை பெக் சிக்கிங்கரின் செயலுக்கு இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பேராசிரியை வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "தான் தவறு செய்து விட்டதாகவும், தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று பேராசிரியை தெரிவித்துள்ளார்.