Published:Updated:

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் பீய்ச்சியடிக்கும் சுவர்! (வீடியோ)

Vikatan Correspondent
பொது இடத்தில் சிறுநீர் கழித்தால்  பீய்ச்சியடிக்கும் சுவர்! (வீடியோ)
பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் பீய்ச்சியடிக்கும் சுவர்! (வீடியோ)
பொது இடத்தில் சிறுநீர் கழித்தால்  பீய்ச்சியடிக்கும் சுவர்! (வீடியோ)

பெர்லின்:  ஜெர்மனி நாட்டில் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர் மீது திருப்பி  பீய்ச்சியடிக்கும் நவீன சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிலர் சிறுநீர் கழித்து சுற்றுப்புற சூழலைக்  கெடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் வீசும் துர்நாற்றத்தால் அப்பகுதியே  பாழடைந்து போகிறது.

அந்த வழியைக் கடந்து செல்வோர் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். இந்தச் சுகாதார சீர்கேடில் இருந்து விமோசனம் பெற ஜெர்மனியில் அதிநவீன தொழில் நுட்பம்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனி ஹாம்பிரிக் நகரில், செயிண்ட் பாலி இரவு விடுதி பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் சிறுநீர் கழித்து நாறடித்து வருகின்றனர்.

இதை தடுக்க விடுதி நிர்வாகம் தனது கட்டட சுவர்களில் தண்ணீர் பட்டால் அதனை திரும்ப பீய்ச்சியடிக்கும் தன்மை கொண்ட அதிநவீன  பெயிண்டை அடித்துள்ளனர்.

அதன் அருகில், ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘இங்கு சிறுநீர் கழிக்காதீர். அது மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதே பெயிண்டை அந்த விடுதியை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் தங்கள் சுவர்களில் அடித்துள்ளனர்.


தொழில் நுட்பம் வாய்ந்த இந்த பெயிண்டை அமெரிக்க கம்பெனி கடந்த 2012 ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளது.

3.7 லிட்டர் பெயிண்ட் உள்ள ஒரு டின்னின் விலை ரூ. 37 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.