Published:Updated:

இந்திய மாணவி அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

Vikatan Correspondent
இந்திய மாணவி அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
இந்திய மாணவி அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
இந்திய மாணவி அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

நியூயார்க்:  அமெரிக்காவில் பல்மருத்துவம் பயின்று வந்த மாணவி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவைச்  சேர்ந்த ரந்திர் கவுர் என்ற பெண் பல் மருத்துவம் பயின்று வந்தார். 37 வயதான இவர் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 8 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சீக்கிய கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு   தனது வீட்டுக்கு திரும்பிய ரந்திர் கவுரை, பின்தொடர்ந்து வந்த மர்மநபர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டதாக சான் பிரான்சிஸ்கோ நகர போலீசார் நேற்று தெரிவித்தனர்.

ரந்திர் கவுர் பயன்படுத்திய பொருட்கள் அவர் பிணமாகக்  கிடந்த வீட்டில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் கிடந்தது, போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. வீட்டில் கிடந்த அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இந்த கொலை தொடர்பான பின்னணி தகவல்களை அறிந்தவர்கள் தாமாக முன்வந்து போலீசாரிடம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர். 

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் இந்திய மாணவி மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.