Published:Updated:

அமெரிக்க ராணுவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆல்-லைனில் மிரட்டல்!

Vikatan Correspondent
அமெரிக்க ராணுவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆல்-லைனில் மிரட்டல்!
அமெரிக்க ராணுவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆல்-லைனில் மிரட்டல்!
அமெரிக்க ராணுவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆல்-லைனில் மிரட்டல்!

நியூ யார்க்: அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆன்-லைனில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பெண்டகன் விசாரணை நடத்தி வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி பிணைக்கைதிகளை பிடித்து தலையைத் துண்டித்து படுகொலை செய்து, அதை வீடியோ படம் எடுத்து, ஆன்லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இப்படி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வாலிபர்கள் சேர்ந்து போரிட்டு வருகின்றனர். இதை எதிர்த்து, அமெரிக்காவின் தலைமையில் உலக நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 100 அமெரிக்க ராணுவ வீரர்களின் பெயர் மற்றும் முகவரியுடன் இணையதளத்தில் அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் அதில், அவர்களை கொலை செய்ய உள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு சர்வர்கள் மற்றும் தரவுத்தளங்களை ஹேக்கிங் செய்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த எச்சரிக்கை தொடர்பாக பெண்டகன் விசாரணையை தொடங்கி உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், ''இந்த தகவல்களில் உண்மை உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஆனால், இது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்றார்.