Published:Updated:

'காரைத் தாறுமாறாக இயக்கிய 4 வயதுச் சிறுவன்!' - கைது செய்து அழாமல் பார்த்துக்கொண்ட காவல்துறையினர்!

கைது

நான்கு வயதுச் சிறுவன் வீட்டிலிருந்தவர்களுக்குத் தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரைத் தாறுமாறாக இயக்கி, அருகே இருந்த கார்களைச் சேதப்படுத்தியுள்ளான். சிறுவனைக் கைது செய்த காவல்துறை அவன் அழாமல் இருக்க சாக்லேட், பொம்மைகள் என வாங்கித்தந்து பத்திரமாகப் பார்த்துக்கொண்டனர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை எடுத்து யாருக்கும் தெரியாமல் காரை இயக்க முயன்றுள்ளான். அப்போது காரின் ஆக்ஸ்லெட்டரை வேகமாக அழுத்தி என்ஜினை உறுமவிட்டபடி காரை இயக்கியபோது கார் கட்டுப்பாடின்றிச் சென்று அருகே பார்க் செய்திருந்த கார்களில் மோதியுள்ளது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அங்கு வந்த காவல் துறையினர் கார்களை அப்புறப்படுத்தி அந்தச் சிறுவனைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனை விசாரித்த காவல் துறையினர், சிறுவனின் அப்பா அலுவலகம் சென்ற சமயத்தில் அம்மாவின் கார் சாவியை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து வந்து காரை இயக்கியுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனின் பெற்றோர்களை போனில் அழைத்து காவல் நிலையம் வரச்சொல்லியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பெற்றோர்கள் வரும்வரை அச்சிறுவன் அழாமல் இருக்க சாக்லேட், பொம்மைகள் என வாங்கித்தந்து பத்திரமாகப் பார்த்துக்கொண்டனர் காவல் துறையினர். அதுமட்டுமல்லாமல் இதுபற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவல் துறையினர் அந்தச் சிறுவனை 2021-ன் பார்முலா ஒன் சாம்பியனான (2021 Formula One World Champion) மேக்ஸ் வெர்ஸ்டப்பனோடு (Max Verstappen) ஒப்பிட்டு இந்தச் சிறுவன் புதிய மேக்ஸ் வெர்ஸ்டப்பன் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism